
செய்திகள் தமிழ் தொடர்புகள்
விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடும் உயர்வு; திருச்சி செல்ல ரூ4000: பயணிகள் அதிர்ச்சி
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணம் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் கல்வி, பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் வரும் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது ஒரு நாள் விடுமுறையாக இருந்தாலும், மேலும் இரண்டு நாள் விடுப்பு எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்க மென்பொருள் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தயாராகிவிட்டனர்.
இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் விலைப்பட்டியலின்படி, இருக்கையில் பயணிக்க அதிகபட்சமாக ரூ.1,320 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
இதேபோல், அதிநவீன சொகுசு பேருந்துகளில் படுக்கையில் பயணிக்க ரூ.1,840 வசூலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் சென்னையில் இருந்து திருச்சி செல்லவும், மீண்டும் ஞாயிறன்று (ஆக.31) திருச்சியில் இருந்து சென்னை செல்லவும் இதே அளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் இதில் குறைவில்லாத வகையில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, “விழா நாட்களில்தான் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, சாதாரண நாட்களில் ஏற்படும் இழப்பை இந்த நாட்களில்தான் ஈடு செய்யமுடியும்.
அதேநேரம், சங்க உறுப்பினர்கள் யாரும் நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. அவ்வாறு வசூலிப்பதை அறிந்தால் நாங்களே போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகாரளிக்கிறோம். விநாயகர் சதுர்த்தி நாளில் குறைந்தபட்ச கட்டணத்திலும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றனர்.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, “தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் குறித்து 1800 425 6151 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்” என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 1:27 pm
‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
August 24, 2025, 9:58 pm
இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது: பெங்களூரு புகழேந்தி
August 24, 2025, 6:47 pm
திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு: கனிமொழிக்கு பெரியார் விருது
August 23, 2025, 10:43 am
இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆதரவு கேட்டு சென்னை வருகிறார்
August 22, 2025, 1:28 pm
சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் 5 செ.மீ. மழைப் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
August 21, 2025, 5:34 pm
மாலையில் துவங்கும் தவெக மாநாட்டிற்காக காலையிலிருந்தே குவிந்த 2 லட்சம் தொண்டர்கள்
August 21, 2025, 11:08 am