
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் 5 செ.மீ. மழைப் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை:
இன்று அதிகாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது.
கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பதிவாகியுள்ளது.
துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், ராஜா அண்ணாமலைபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடையாரில் 9 செ.மீ., ஈஞ்சம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணையில் தலா 8 செ.மீ., நுங்கம்பாக்கம் மற்றும் நீலாங்கரையில் தலா 6.7 செ.மீ. மற்றும் வேளச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தகவலின்படி, நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் 50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பெய்திருக்கிறது.
மேலும், தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் பெய்த இந்த திடீர் கனமழைக்கு வெப்பச்சலனமே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm
ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்?: அஜித் குமார் விளக்கம்
October 5, 2025, 4:48 pm
இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: மருத்துவர் கைது
October 4, 2025, 9:36 pm