நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மாநாடு திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்: இயக்குநர் வெங்கட்பிரபு

சென்னை:

சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படம் சிறப்பாக உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இத் தகவலை வெளியிட்ட அப் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு, "தலைவர் ரஜினி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மாநாடு படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் அசத்தி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்க, யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டியுள்ளது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பதிவில் கூறியதாவது, இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள். சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப் படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது.

நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது. மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset