நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மும்பையில் பலத்த மழையால் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் சேவை பாதிப்பு

சென்னை: 

கடந்த இரு நாட்களாக மும்​பை​யில் பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால், மோச​மான வானிலை நில​வுவ​தால், மும்பை​யில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்​னைக்கு வரவேண்​டிய இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் ரத்து செய்​யப்​பட்​டது.

அதே​போல், சென்​னை​யில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்​பைக்கு புறப்​பட்டு செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.
 
மும்பை - சென்னை இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம், மும்பை - சென்னை ஏர் இந்​தியா விமானம், சென்னை - மும்பை ஏர் இந்​தியா விமானம், சென்னை - மும்பை இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்​களின் வரு​கை, புறப்​பாடு இன்று தாமத​மானது. 

விமானங்​கள் ரத்​து, தாமதம் குறித்​து, இண்​டிகோ ஏர்​லைன்​ஸ், ஏர் இந்​தியா விமான நிறு​வனங்​கள், பயணி​களுக்கு முன்​ன​தாகவே அறி​விப்பு கொடுத்​து, அவர்​கள் மாற்று வி​மானங்​களில், பயணிக்​க ஏற்​பாடு​களை செய்​தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset