நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் சம்பவம்: இலவச சத்துணவு சாப்பிட்ட 365 பேர் மருத்துவமனையில் அனுமதி 

ஜாவா: 

இந்தோனேசியாவில் இலவச சத்துணவு சாப்பிட்ட 365 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த சமையலறையில் சமைக்கப்பட்ட உணவு வெவ்வேறு பள்ளிகளில் பரிமாறப்பட்டது. அந்த உணவு உட்க்கொண்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது பள்ளிகளில் வழங்கப்பட்ட உணவு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதன் முடிவுகள் வெளிவரும் வரை உணவு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டோரின் மருத்துவ செலவுகளை அரசாங்கம் ஏற்றது.

கடும் வயிற்று வலி ஏற்பட்டதாக மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனவரியில் இந்தோனேசிய பள்ளிகளில் இலவச சத்துணவுத் திட்டம் அறிமுகமானது.

திட்டத்தால் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பயனடைகின்றனர்.

அதே சமயம் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவால் இதுவரை 1000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம்  Jakarta Post

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset