நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது 

சென்னை: 

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த ஷேக் முஹம்மது (28) என்ற பயணி அவ்வப்போது எழுந்து கழிப்பறைக்குச் சென்று புகைப்பிடித்துள்ளாா்.

இதைப் பாா்த்த விமானப் பணிப்பெண்கள் மற்றும் பிற பயணிகள் ஷேக் முகமதுவை கண்டித்துள்ளனா். ஆனால், அதை ஏற்காமல் அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளாா்.

இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, ஷேக் முஹம்மதுவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

விசாரணைக்குப் பின்னா், அவா் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஷேக் முஹம்மதுவை கைது செய்தனா்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset