
செய்திகள் மலேசியா
ஷாரா மரண வழக்கில் நாளை மறுநாள் 5 சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்
கோலாலம்பூர்:
ஷாரா கைரினா மகாதிர் சம்பந்தப்பட்ட பகடிவதை வழக்கு தொடர்பாக ஐந்து சிறார்களுக்கு எதிராக கோத்தா கினபாலு குழந்தைகள் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றம் சாட்டப்படும்.
சட்டத்துறை தலைவர் முஹம்மத் துசுகி மொக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.
குற்றம் சாட்டப்படுபவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507சி (1) இன் கீழ் குற்றம் சாட்டப்படும்.
இது அச்சுறுத்தும், பகடிவதை செய்யும் அல்லது அவமதிக்கும் எந்தவொரு வார்த்தைகளையும், தகவல் தொடர்புகளையும் பயன்படுத்துதல் ஆகியவை இக் குற்றச்சாட்டுகளாகும்.
முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
போலிஸ் துறைக்கு பரிந்துரைத்த ஒரு மாணவரின் மரணம் தொடர்பான விசாரணை ஆவணங்களை மதிப்பாய்வு செய்ததாக அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அறிவித்தது.
இதன் விளைவாக, கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் பல சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏஐசிப் முடிவு செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 9:09 pm
மித்ராவின் புதிய திட்டங்களை பிரதமர் நாளை அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
August 18, 2025, 2:34 pm
எதிரிகளின் கூச்சலைவிட உறுப்பினர்களின் மெளனம் ஆபத்தானது: டத்தோ ஸ்ரீ எம் சரவணன்
August 18, 2025, 11:35 am