
செய்திகள் மலேசியா
ஜாலுர் ஜெமிலாங் விதிமீறல்களைக் காவல்துறை முறையாகவும் பொறுப்புடனும் விசாரிக்கும்: உள்துறை அமைச்சர் சைபுடின்
கோலாலம்பூர்:
ஜலூர் ஜெமிலாங்கை முறையற்ற வகையில் காட்சிப்படுத்துவது தொடர்பான எந்தவொரு குற்றத்தையும் போலீசார் கவனமுடனும் பொறுப்புடனும் விசாரிப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
விசாரணைகளில் தீங்கிழைக்கும் நோக்கம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
“ஒரு குற்றம் நடந்தால், அதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட வேண்டும், அதன் பிறகு விசாரணை நடத்தப்படும். அது தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். இருப்பினும், இந்த விஷயம் கலவரத்தை உருவாக்கும் அளவுக்கு பெரிதாக்கப்பட்டால், அது நமது நாட்டின் தற்போதைய சூழலில் ஆரோக்கியமானதாக இருக்காது.
“தேசம் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய, காவல்துறை தங்கள் கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என்று நம்புங்கள்,” என்று அவர் இன்று மக்களவையில் இன்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 2:34 pm
எதிரிகளின் கூச்சலைவிட உறுப்பினர்களின் மெளனம் ஆபத்தானது: டத்தோ ஸ்ரீ எம் சரவணன்
August 18, 2025, 11:35 am
சிலாங்கூரின் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: மெட் மலேசியா
August 18, 2025, 11:01 am