
செய்திகள் மலேசியா
மருதாணி இடும் ஒப்பனை கைத்தொழில் வாயிலாக வருமானத்தை ஈட்டலாம்: பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்
பத்துகாஜா:
மருதாணி இடும் ஒப்பனை கைத்தொழிலை ஒவ்வொரு மகளிரும் கற்றுக்கொள்வது அவசியமாகும். இந்த கைத்தொழிலை நன்கு கற்றுத்தேர்ந்து அதன் வாயிலாக அவர்கள் தொழில்முனைவராக செயல்படுவதற்கும், ஊதியம் பெறுவதற்கும் பேருதவியாக அமையும் என்று டேசா செங்காட்( இந்தியன் செட்டல்மண்) மண்டபத்தில் நடைபெற்ற மருதாணி பயிற்சி பட்டறை நிகழ்வை நிறைவு செய்த போது பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார் .
இன்றைய காலகட்டத்தில் திருவிழா நிகழ்வு, இதர பெருநாள் காலங்களில் இந்த மருதாணி இடும் ஒப்பனைக்கு இந்திய மகளிரிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஆகையால், இந்த மருதாணி இடும் ஒப்பனை கைத்தொழிலை கற்றுத்தேர்ந்து அதன் பின் தங்களின் கைத்தொழிலாக தீவிரமாக முற்பட்டு செய்தால் தங்களின் வருமானத்தை அவர்கள் பெருக்க முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
இன்று இங்கு காலை முதல் மாலை வரை வரிசான் இந்தியா மலேசியா இயக்கத்தின் ஏற்பாட்டில் 30 மகளிர்கள் கலந்துக்கொண்டனர். இந்த குறுகிய காலகட்டத்தில் பலர் தங்கள் திறமைகளை அழகாக மருதாணி இட்டு தங்களிடமிருந்த திறமையை வெளிப்படுத்தினர். காலப்போக்கில் இவர்கள் அனைவரும் நன்கு கற்றுத்தேர்ந்து தங்களுடைய கைத்தொழிலாக உருமாற்றம் செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
பல மகளிர் இத் தொழிலை தங்கள் கணவருக்கு உதவும் வகையில் குடும்ப வருமானத்தை அதிகரிக்க இது ஒரு சிறந்த தொழிலாகும். குறிப்பாக, வாடிக்கையாளர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் இல்லத்திற்கு அல்லது அவர்களின் நிகழ்வில் பலருக்கு மருதாணி இடும் ஒப்பனையை செய்யலாம். இல்லையேல் தொழில்முனைவராக சிறுதொழில் அடிப்படையில் கடை வீதிகளிலும் அல்லது கடைகளில் ஒரு பகுதியில் தங்களின் மருதாணி தொழிலை சிறப்பாக செய்ய முடியும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வின் நிறைவு விழாவில் பயிற்சியாளர்களின் படைப்புகளை நேரடியாக வ.சிவகுமார் கண்டுகளித்தார். அத்துடன், இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட அனைத்து மகளிர்களுக்கும் சான்றிதழை வழங்கினார். பயிற்சியாளர் அனிசாவிற்கு நினைவுச் சின்னமும் பழக்கூடையும் வழங்கப்பட்டது. டேசா செங்காட் ஜே.கே.கே. இந்நிகழ்விற்கு வற்றாத ஆதரவு வழங்கி சிறப்பித்தனர்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 10:13 pm
ஷாரா மரண வழக்கில் நாளை மறுநாள் 5 சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்
August 18, 2025, 9:09 pm
மித்ராவின் புதிய திட்டங்களை பிரதமர் நாளை அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
August 18, 2025, 2:34 pm
எதிரிகளின் கூச்சலைவிட உறுப்பினர்களின் மெளனம் ஆபத்தானது: டத்தோ ஸ்ரீ எம் சரவணன்
August 18, 2025, 11:35 am