நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிரிகளின் கூச்சலைவிட உறுப்பினர்களின் மெளனம் ஆபத்தானது: டத்தோ ஸ்ரீ எம் சரவணன்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநில ம.இ.காவின் 79ஆவது பேராளர் மாநாட்டைக் கட்சியின் தேசியத் தலைவர் சார்பாக துவக்கி வைத்தேன். 

சிரம்பான், ம.இ.கா மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் மாநிலம் முழுமையும் சார்ந்த பேராளர்கள் உத்வேகத்துடன் கலந்துக்கொண்டது பெருமிதமளிக்கிறது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம இ காவின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கட்சிப் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி வருகின்றோம். 

அரசு பதவிகள் இல்லாவிடினும், இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக தூரநோக்கு சிந்தனையுடன் செயலாற்றி வருகின்றோம்.  

'நமது சமுதாயம், நமது கடமை' எனும் தேசியத் தலைவரின் தாரக மந்திரத்திற்கு ஏற்ப கட்சியின் இலக்குகள், இலட்சியங்கள் அமைந்துள்ளன. 

கட்சியின் உருமாற்றங்களும், செயல்திட்டங்களும் நிறைவேற ஒற்றுமையுடன் இணைந்து பயணிப்போம்.

60 வருடங்களில் இந்தியர்கள் மத்தியில் வர்த்தகர்கள், பட்டதாரிகள், கல்விமான்கள், தொழிலதிபர்கள் உருவாக யார் காரணம். என்பதை சிந்தனையுள்ள சமுதாயம் சிந்திக்க வேண்டும். 

'எதிரிகளின் கூச்சலைவிட 
உறுப்பினர்களின் மெளனமே ஆபத்தானது'. இதை ஒவ்வொரு உறுபினரும் கருத்திலும், கவனத்திலும் கொள்ள வேண்டும். 

இவ்வாறு டத்தோ சரவணன் உரையாற்றினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset