நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் புதிய திட்டங்களை பிரதமர் நாளை அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

மித்ராவின் புதிய திட்டங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை அறிவிப்பார்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

பிரதமர் நாளை மக்களவையில் மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவின் கீழ் பல புதிய முயற்சிகளை அறிவிக்கவுள்ளார்.

மித்ராவின் கீழ் புதிய முயற்சிகள், திட்டங்களை உருவாக்குவதில் அரசாங்கம் ஒரு புதிய, மிகவும் பயனுள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தும்.

இந்த புதிய முயற்சி இந்திய சமூகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் அவர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதிலும், நாட்டின் வளர்ச்சியிலிருந்து பயனடைவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நடவடிக்கை, உள்ளடக்கிய, முற்போக்கான, தாக்க அடிப்படையிலான அணுகுமுறையின் மூலம் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பங்காளியாக இந்திய சமூகத்தின் பங்கை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதியையும் பிரதிபலிக்கிறது.

மக்களவையில் இன்று நடந்த 13ஆவது மலேசியா திட்டத்தின் இறுதி அமர்வில் டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset