நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாரா கைரீனா மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணைகளே நடைபெறுகின்றன: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின்

கோலாலம்பூர்:

மாணவி சாரா கைரீனா மகாதீர் மரணம் தொடர்பான விசாரணையில் எந்தவித ஒளிவு மறைவோ அல்லது வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியோ நடைபெறவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

இந்த வழக்கில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் உண்மையான தகவல்கள், அதிகாரப்பூர்வ அறிக்கைகள், சட்டபூர்வமான ஆவணங்கள் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.

“விசாரணை தொடங்கியது முதல் உடற்கூறு முடிவுகள் வரை, எந்த தரப்பினராலும் வழக்கை மூடி மறைக்கும் முயற்சிகள் நடைபெறவில்லை” என்று அவர் வலியுறுத்தினார்.

சாரா கைரீனாவின் உயிரிழப்பு மிகவும் வேதனையானதும், முக்கியத்துவமும் வாய்ந்த சம்பவம் என்பதால், விசாரணைகள் அனைத்தும் தெளிவாகவும் சரியான சட்ட  நெறிப்படுதலின் கீழும் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset