நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர்.

காஸா:

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. 24 மணி நேர இடைவெளியில் இஸ்ரேலின் தாக்குதலில் 100 பேர் மாண்டனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று காஸா சுகாதார அமைச்சு கூறியது.

ஞாயிற்றுக்கிழமை காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் செய்தியாளர்கள் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு உலக அளவில் கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. இருப்பினும் இஸ்ரேல் அதைப் பொருட்படுத்தவில்லை.

காஸா மக்கள் உணவு, உதவிப் பொருள்களைப் பெற வரிசையில் காத்திருந்தபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் 31 பேர் மாண்டனர். இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொலைகளை இஸ்ரேல் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும்  நாளுக்கு நாள் அங்கு குழந்தைகள் மடிந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் உணவின்றி மடிந்தோர் எண்ணிக்கை 227க்கு உயர்ந்துள்ளது.

உணவுப் பொருட்களும் மருந்துகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை மறித்து கொள்ளை இட்டு செல்வதில் இஸ்ரேல் இராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset