நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனா மீதான வரியை மீண்டும் ஒத்திவைத்த டிரம்ப்

வாஷிங்டன்: 

சீனா மீது 30 சதவீத வரியை மேலும் 90 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்தியா மீதான 25 சதவீத வரியை அமெரிக்கா உடனடியாக அமல்படுத்திவிட்டது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் சீனா மீதான வரியை மட்டும் டிரம்ப் ஒத்தி வைத்துள்ளார்.

இதே காரணத்துக்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட மேலும் 25 சதவீத வரி வரும் 27ம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப்  அறிவித்துள்ளார்.

சீனா மீதான வரிவிதிப்பு ஆகஸ்ட் 12ம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்ற அறிவித்திருந்த நிலையில்,தற்போது  அதை 90 நாள்களுக்கு ஒத்திவைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல், மே மாதத்தில் சீனா மீதான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்தியது. அதற்கு பதிலடியாக  சீனா 125 சதவீதம் வரியை விதித்தது. பின்னர் அமெரிக்கா 30 சதவீதமாகவும், சீனா 10 சதவீதமாகவும் வரிகளை குறைத்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset