நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிகையலங்காரத் துறை குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன: சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் சிகையலங்காரத் துறை குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டின் முற்பாதியில் அதிகப் புகார்களைப் பெற்ற முதல் 10 துறைகளில் சிகையலங்காரத் துறை 9ஆவது நிலையில் உள்ளதாக CASE எனும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

இருப்பினும் கடந்த ஆண்டின் முற்பாதியில் பெறப்பட்ட 170 புகார்களைக் காட்டிலும் இந்த ஆண்டின் முற்பாதியில் சிகையலங்காரத் துறை பற்றி 167 புகார்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக CASE-இன் தலைவர் மெல்வின் யோங் (Melvin Yong) கூறினார்.

தரமற்ற சேவை, கூடுதல் கட்டணம், சேவை பற்றிய தவறான தகவல்கள் முதலியன பற்றியே பெரும்பாலும் புகார் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த ஆண்டு இதுவரை திடீரென்று மூடப்பட்ட சிகையலங்காரக் கடைகளில் முன்கூட்டியே கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் இழந்த தொகை சுமார் 5,600 வெள்ளி.

ஆனால் சென்ற ஆண்டு அந்தத் தொகை சுமார் 21,800 வெள்ளியாகயிருந்தது.

புகார்கள் அதிகரிப்பதைத் தடுக்க சிகையலங்காரம் செய்வோருக்கான குறைந்தபட்ச தகுதியை உயர்த்த வேண்டும் என்று HACOS எனும் அழகுப் பராமரிப்பு, சிகையலங்காரம், ஒப்பனை, நக அலங்காரச் சேவை ஊழியர்களுக்கான அமைப்பு வலியுறுத்தியது.
 
ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset