நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து, கம்போடியா எல்லை மோதல்களுக்கு பின் ஆசியான் தலைமை நாடாக மலேசியா நடத்திய சமாதான முயற்சிகள் அனைத்துலக ரீதியில் கவனம் பெற்றுள்ளது: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

ஈப்போ:

தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய எல்லை மோதல்களுக்கு பின் ஆசியான் தலைமை நாடாக மலேசியா நடத்திய சமாதான முயற்சிகள் அனைத்துலக ரீதியில் கவனம் பெற்றுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நமது சமாதான முயற்சிகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் நம்பிக்கை, மலேசியாவின் அரசியல், பொருளாதார நிலைத்தன்மையை உலகளவில் எடுத்துக்காட்டுகிறது என்றார் பிரதமர்.

மலேசியாவின் வலுவான சர்வதேச உறவுகள் புதிய பொருளாதார வாய்ப்புகளை நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

பேராக் MADANI தொழில்முனைவோர் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டபோது அன்வார் இப்ராஹிம் இதை தெரிவித்தார்.

தாய்லாந்து-கம்போடியா மோதல் தவிர்க்கப்பட்ட போது, Farm Fresh பால் வெற்றிகரமாக சந்தையில் நுழைந்ததை அவர் சுட்டிக்காட்டினர். மேலும், சர்வதேச உறவுகள் சீராக இருந்தால், Farm Fresh தாய்லாந்தில் பால் பண்ணையைத் தொடங்க விரும்பினால், முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Farm Fresh நிறுவனத்தின் பேராக் வளாகம் 828 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதோடு 4,300 பசுக்களை வைத்திருக்கும் திட்டமாக இருக்கிறது. தினமும் 22,000 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது. வருடத்திற்கு 10 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் பெரிய பால் பண்ணையாக இது விளங்குகிறது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset