நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸின் தாயாரை டத்தோஶ்ரீ அமிரூடின் சந்தித்து முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்

செமினி:

சம்சுல் ஹரிஸின் தாயாரை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் சந்தித்து முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்.

ஸ்கூடாடைச் சேர்ந்த மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலாப்ஸ்) கேடட் பயிற்சியாளர் சம்சுல் ஹரிஸ் மரனமடந்தார்.

இந்த சம்பவம் சிலாங்கூருக்கு வெளியே நடந்தாலும், மாநில அரசு அதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.

அதன் அடிப்படையில் மறைந்த சம்சுல் ஹாரிஸ் ஷம்சுதீனின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத்குனை இன்று சந்தித்தேன்,

உம்முவின் குடும்பத்திற்கு ஆதரவு  அளிக்கும் விதமாக நான் வந்தேன்.

மேலும் சட்ட உதவி, விசாரணையை கண்காணித்தல், குடும்பத்தின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுதல் ஆகிய இரண்டிலும் மாநில அரசு சிறந்த ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன்.

இந்த முன்னேற்றத்தை நாங்கள் கண்காணித்து நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வோம் என்று செமினியில் உள்ள மரணமடைந்தவரின் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset