நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அக்மால் சாலே இன்று இரவு டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்

கோலாலம்பூர்:

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலே இன்று இரவு டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.

பினாங்கு கப்பாளா பாத்தாசில்  நடைபெற்ற தேசியக் கொடி  ஒற்றுமை நிகழ்ச்சி தொடர்பாக அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.

புக்கிட் அமானைச் சேர்ந்த ஒரு விசாரணை அதிகாரி இன்று இரவு 11 மணிக்கு டாங் வாங்கி போலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தன்னைத் தொடர்பு கொண்டதாக அக்மல் தெரிவித்தார்.

நான் போலிஸ் அதிகாரிகளுக்கு என்னால் முடிந்தவரை ஒத்துழைப்பேன்.

நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்க நான் செலுத்த வேண்டிய விலை இதுவாக இருந்தால், அது பரவாயில்லை.

நான் தயாராக இருக்கிறேன், இறுதிவரை போராடுவேன் என்று அவர்  முகநூல் பதிவில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset