
செய்திகள் இந்தியா
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
புது டெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
ரஷியா- உக்ரைன் போர் நிறுத்த அமெரிக்காவின் அலாஸ்காவில் வரும் வெள்ளிக்கிழமை ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதில் பங்கேற்க உக்ரைனுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில், செலென்ஸ்கியுடனான உரையாடலைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், மோதலை விரைவாகவும், அமைதியாகவும் தீர்ப்பதற்கான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்.
இந்தியா இந்த விஷயத்தில் தனது பங்களிப்பைச் செய்யத் தயாராக உள்ளதுடன், உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் அதிபர் ùஸலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், இருதரப்பு ஒத்துழைப்பு, ராஜீய சூழல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் விவாதித்தேன். போருக்கு நிதி திரட்டும் ரஷியாவின் திறனைக் குறைக்க, அதன் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
இந்தப் போர் தொடர்பான எந்தவொரு முடிவும் உக்ரைனின் ஈடுபாட்டுடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா ஆதரிப்பது முக்கியமானது என்பதை வலியுறுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 11:02 am
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
August 14, 2025, 10:03 am
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
August 13, 2025, 11:39 am
தெரு நாய்க் கடியில் இருந்து மக்களை காப்பாற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
August 13, 2025, 11:27 am
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம்
August 11, 2025, 5:36 pm
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
August 11, 2025, 4:56 pm