நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தெரு நாய்க் கடியில் இருந்து மக்களை காப்பாற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புது டெல்லி:

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் நாய்க் கடி சம்பவங்களை தொடர்ந்து அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நிரந்தரமாக காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதைத் தடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

தில்லி, குருகிராம், நொய்டா, காஜியாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய்க் காப்பகங்களின் அடைக்க வேண்டும்.  

The Supreme Court has directed removal of stray dogs in Delhi's vulnerable  areas and warned of strict action against anyone obstructing the exercise

சுமார் 5,000 நாய்களைப் பராமரிப்பதற்கான காப்பங்களை ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் உருவாக்க அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பீட்டா அமைப்பு, தில்லியில் சுமார் 10 லட்சம் தெரு நாய்களைப் பிடிப்பதால் மட்டும் அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது. நாய்க் கடி சம்பவங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset