
செய்திகள் இந்தியா
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம்
புது டெல்லி:
டெல்லி- வாஷிங்டன் ஏர் இந்தியா விமான சேவை செப்.1 முதல் நிறுத்தம் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதைத்தொடர்ந்து, பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் 1 முதல் டெல்லி- வாஷிங்டன் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு திறனை உறுதி செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்காக டெல்லி - வாஷிங்டன் இடையிலான விமான சேவை செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.போயிங் 787 விமானங்களின் மீதான மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக, 26 விமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், விமானங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிவரை இந்த நிலை நீடிக்கும்.அதேசமயம், அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து வாஷிங்டன் செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
கனடாவின் டொரன்டோ, வான்கூவர் உட்பட வட அமெரிக்காவின் ஆறு இடங்களுக்கும், ஏர் இந்தியா தொடர்ந்து நேரடி விமானங்களை இயக்கும் என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 6:20 pm
பிகாரில் பாஜக மேயருக்கு இரு வாக்காளா் அட்டை: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
August 14, 2025, 6:10 pm
சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன் தேர்தலில் போட்டி: புதிய சர்ச்சையை கிளப்பும் பாஜக
August 14, 2025, 2:26 pm
3 மணி நேரத்தில் CHEQUEகளுக்கு பணம்: அக்டோபர் 4 முதல் அமல்
August 14, 2025, 11:02 am
இந்தியாவில் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன், வங்கியின் கடன் ரத்து
August 14, 2025, 10:03 am
20% ethanol கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா?: இந்திய அரசு விளக்கம்
August 13, 2025, 12:32 pm
உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
August 13, 2025, 11:39 am
தெரு நாய்க் கடியில் இருந்து மக்களை காப்பாற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
August 11, 2025, 5:36 pm
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
August 11, 2025, 4:56 pm