நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெங்களம்பு வட்டார மக்களுக்கு ஜாலோர் கெமிலாங் வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார்

பத்துகாஜா: 

இங்குள்ள மெங்களம்பு வட்டாரத்தில் செயல்பட்டு வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நம்நாட்டின் சுதந்திர மாதத்தை முன்னிட்டு ஜாலோர் கெமிலாங்கை வழங்கி உதவினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்.

நம் நாட்டின் ஒற்றுமை நிலைத்தன்மைக்கு ஆதரவு அளிப்பதோடு, தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் பொருட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த ஜாலோர் கெமிலாங்கை பறக்கவிடும் பொருட்டு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் பல இன மக்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஜாலோர் கெமிலாங்கை பறக்க விடப்படுகிறது. 

இதனால் ஒற்றுமை, உன்னத நோக்கம் மற்றும் நாட்டின் சுபீட்சம் மேம்படுத்தப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset