நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்

நியூ யார்க்:

பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் (Jim Lovell) காலமானார். அவருக்கு வயது 97.

1970இல் நிலவுக்குப் புறப்பட்ட அப்போலோ 13 (Apollo 13) பயணத்தில் பங்குபெற்றவர்களில் அவரும் ஒருவர்.

தோல்வியில் முடிந்த அந்தப் பயணம் இன்றுவரையில் தன்முனைப்புத் தரும் ஒரு நிகழ்வாகத் திகழ்கிறது.

பயணத்தின்போது விண்கலத்தில் வெடிப்பு ஏற்பட்டதில் லோவெல்லும் அவருடன் இருந்த இரு வீரர்களும் மூன்றரை நாள்கள் விண்வெளியில் சிக்கிக்கொண்டனர்.

நீரும் உணவும் இல்லாதபோதும் மனம் தளராமல் பூமி திரும்புவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.

அப்போலோ 13 விண்வெளிப் பயணம் பற்றி 1995ஆம் ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

அதில் லோவெல்லின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் டாம் ஹேங்ஸ் (Tom Hanks) நடித்தார்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset