நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த ஆறு மாதங்களில் 6,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றுள்ளனர்: சைபுதீன் நசுதியோன்

கோலாலம்பூர்:

சிங்கப்பூர் நாட்டின் பிரஜையாவதற்கு  தங்கள் குடியுரிமையை கைவிடும் மலேசியர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக அதிகரித்துள்ளது, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 6,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்கள் மலேசியக் குடியுரிமையை இழந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 6,060 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

"முந்தைய ஆண்டுகளில் 2015 இல் 7,394 பேரின் தகவல்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து 8,654 (2016), 7,583 (2017), 7,665 (2018) பேர் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளனர்" என்று அவர் கோத்த பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசனுக்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சர் தெரிவித்தார். 

2015 முதல் 2025 வரை சிங்கப்பூர் குடியுரிமைக்கு விண்ணப்பித்த மலேசியர்களின் எண்ணிக்கையை டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். 

கடந்த ஆண்டு மட்டும் 16,930 குடியுரிமை துறப்புகள் பதிவாகியுள்ளன, இது 2023 இல் 11,500 ஆக இருந்தது.

2022 இல் இந்த எண்ணிக்கை 5,623 ஆக இருந்தது, இது 2021 இல் பதிவு செய்யப்பட்ட 7,956 ஐ விடக் குறைவு.

கடந்த ஆண்டுக்கு முந்தைய அதிகபட்ச வருடாந்திர மொத்தம் 2019 இல் 13,362 பேர் குடியுரிமையை இழந்துள்ளனர். பின்னர் 2020 இல் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது 5,591 ஆக அது குறைந்தது.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset