நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் சினார் சகாயா திட்டத்தின் கீழ் சிரமப்படும் மக்களுக்கு தலா 1,500 ரிங்கிட் நிதியுதவி: பிரபாகரன் 

கோலாலம்பூர்:

மித்ராவின் சினார் சகாயா உதவி திட்டத்தின் கீழ் சிரமப்படும் மக்களுக்கு தலா 1,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

மித்ராவின் நடவடிக்கை குழுத் பிரபாகரன் இதனை தெரிவித்தார்.

சிரமப்படும், பேறு குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் சினார் சகாயா உதவி நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இதுவரை 700 பேர் பேர் பதிந்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவ மித்ரா பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது.

மாதம் 500 ரிங்கிட் வீதம் மூன்று மாதங்களுக்கு 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.

இன்று ஸ்தாப்பாக், செலாயாங் இந்தான் பைடூரி, பத்து மூடா, ஜாலான் கூச்சிங் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழு குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சிரமப்படும் மக்களுக்கு உதவி செய்ய நேரடியாக களம் இறங்கி இருப்பதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset