
செய்திகள் மலேசியா
மலேசியர்கள் மீது தீவைத்த தாய்லாந்து ஆடவர் கைது
பேங்காக்:
தாய்லாந்தில் இரு மலேசியச் சுற்றுப்பயணிகள் மீது தீ வைத்த சந்தேகத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நேற்று முன்தினம் தலைநகர் பேங்காக்கில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
மலேசியாவைச் சேர்ந்த 26 வயது ஓங் யிக் லியோங் (Ong Yik Leong), 27 வயது கான் சியாவ் சென் (Gan Xiao Zhen) இருவரும் Big C கடைத்தொகுதிக்கு வெளியே இருக்கும் படிகளில் அமர்ந்திருந்தனர்.
அப்போது 30 வயது வாரக்கொர்ன் பப்தைசாங் (Varakorn Pubthaisong) அவர்கள் மீத தின்னர் (thinner) திரவத்தை ஊற்றினார்.
அதிர்ச்சியடைந்த ஓங்கும், கானும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடிய வாரக்கொர்ன் அவர்கள் மீது தீ வைத்ததாகக் கூறப்பட்டது.
கடுமையாகக் காயமுற்ற ஓங்கும்,கானும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மீடியா கோர்ப் ஊடகம் தெரிவித்துள்ளது.
வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஆதங்கத்தில் இருந்தபோது இருவரையும் தாக்கியதாக வாரக்கொர்ன் விசாரணையின்போது கூறினார் எனக் காவல்துறை தெரிவித்தது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
August 9, 2025, 7:04 pm
மெங்களம்பு வட்டார மக்களுக்கு ஜாலோர் கெமிலாங் வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார்
August 9, 2025, 6:57 pm
சிறப்புக் கல்வித் தேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்: கல்வி அமைச்சர் ஃபட்லினா
August 9, 2025, 2:28 pm
சிங்கப்பூர் நபருடன் நடந்த 'காதல் மோசடியில்' பினாங்கு பெண் RM2.3 மில்லியன் இழந்தார்
August 9, 2025, 11:55 am
ஆசியான் மாநாட்டில் சீனா கலந்துகொள்ளக்கூடும்: பிரதமர் அன்வார்
August 8, 2025, 9:27 pm
சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு 2025: துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிதி கலந்துகொள்வார்
August 8, 2025, 6:09 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்: பாப்பாராயுடு அறிவிப்பு
August 8, 2025, 2:28 pm