நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு 2025: துணைப் பிரதமர் ஸாஹித் ஹமிதி கலந்துகொள்வார்

சிங்கப்பூர்:

நாளை சிங்கப்பூர் பாடாங்கில் நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பில் 4 வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

புருணை சுல்தான் ஹசனல் போல்கியா (Sultan Hassanal Bolkiah), இந்தோனேசிய அதிபர் பிரபவோ சுபியாந்தோ (Prabowo Subianto), ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் (Tunku Ismail), மலேசியத் துணைப்பிரதமர் டாக்டர் அஹ்மது ஸாஹித் ஹமிடி (Ahmad Zahid Hamidi) ஆகியோர் அந்த நான்கு தலைவர்கள் ஆவர்.

டாக்டர் ஸாஹித் ஹமிடி மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.

அண்டை நாடுகளிலிருந்து பிரமுகர்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது பெருமையளிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.

அது சிங்கப்பூருக்கும் அந்நாடுகளுக்கும் இடையிலான நட்பைப் பிரதிபலிப்பதாக அமைச்சு தெரிவித்தது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset