நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் மாநாட்டில் சீனா கலந்துகொள்ளக்கூடும்: பிரதமர் அன்வார்

புத்ரா ஜெயா:

சீன அதிபர் சி சின் பிங் வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடும் என்று மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் ஆகக் கடைசியாய் கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கு முன் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொண்டார்

1997ஆம் ஆண்டு மாநாடு நடந்தபோது அப்போது அதிபராய் இருந்த சியாங் செமின் (Jiang Zemin) கூட்டத்திற்கு வந்திருந்தார்.

அக்டோபர் 26 முதல் 28 வரை ஆசியான் உச்சநிலை மாநாடு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.

ஆசியான் தலைவர்களையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் சி சின்பிங் உள்ளிட்ட பங்காளிகளையும் மாநாட்டில் சந்திக்க ஆவலாய் இருப்பதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset