
செய்திகள் இந்தியா
ரூ.730 கோடி GST மோசடி வழக்கு: 12 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
புதுடெல்லி:
ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலி நிறுவனங்கள் பெயரில் சுமார் ரூ.5,000 கோடிக்கு போலி ரசீது (இன்வாய்ஸ்) தயாரித்து முறைகேடான வழியில் ரூ.730 கோடிக்கு மேல் `இன்புட் டாக்ஸ் கிரெடிட்' பெற்றதன் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியான சிவகுமார் தியோரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை கடந்த மே மாதம் முதல் சுற்று சோதனை நடத்தியது.
இந்நிலையில் சிவகுமார் தியோராவிடம் நடத்திய விசாரணையில் இந்த முறைகேட்டில் கூடுதல் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான புதிய மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்க துறை நேற்று 12 இடங்களில் சோதனை நடத்தியது.
ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் ஆவணங்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா என்ற விவரத்தை அமலாக்கத் துறை பகிர்ந்து கொள்ளவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 7:09 pm
காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடிய பாஜகவினர்
August 31, 2025, 7:02 pm
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் மோடி: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
August 27, 2025, 5:48 pm