நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

புது டெல்லி: 

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விபரங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிகாரில் கடந்த ஒரு மாதமாக அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இடம்பெயர்ந்தவர்கள், உயிரிழந்தவர்கள் என அந்த பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முஸ்லிம்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

அப்போது என்.ஜி.ஓ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணிடம், தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது.

உரிய நேரத்தில் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் கமிஷன் வெளியிடும்' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், 75 சதவீத வாக்காளர்கள் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த 11 ஆவணங்களில் ஒன்றை கூட வழங்கவில்லை என்றும், அவர்களது பெயர்கள் அனைத்தும் பூத் அலுவலரின் பரிந்துரையின் பேரிலேயே சேர்க்கப்பட்டது என்றும் பூஷண் தெரிவித்தார்.

இதையடுத்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வரும் 9ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset