நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய விமான நிலையங்களில் உச்சபட்ச பாதுகாப்பு

புது டெல்லி: 

இந்திய விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ரகசிய தகவலால் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை பயங்கரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய புலனாய்வு தகவல்  எச்சரிக்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் பாதுகாப்பு பிரிவு (BCAS) பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இதனால் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, விமான நிலையங்கள், விமான ஓடுபாதைகள், ஹெலிபேட்கள், விமான பயிற்சி மையங்கள் என அனைத்து விமான தளங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset