நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பள்ளி முதல்வர் சுலைமானை நீக்க நீரில் விஷம் கலந்த மூவர் கைது

பெங்களூரு: 

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் அரசு பள்ளியின் முதல்வர் சுலைமானை நீக்க குடிநீரில் விஷம் கலந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

தண்ணீர் தொட்டியிலிருந்த நீரை குடித்த 12 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் தண்ணீரில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.  

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில்,  5-வது வகுப்பு மாணவன் விஷம் கலந்தது தெரியவந்தது.

மாணவனிடம் விஷம் கலந்த பாட்டிலை கொடுத்து தண்ணீர் தொட்டியில் கலக்க சொன்னது கிருஷ்ணா மதார் என்று தெரிய வந்தது.

கிருஷ்ணா மதாரை மிரட்டி இதை செய்யச் சொன்னதாக சாகர் பாட்டீல், நாகனகவுடா பாட்டீல் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். நீண்ட காலமாக  பள்ளியில் முதல்வராக இருக்கும் சுலைமானை நீக்கவே இந்த சதி செயலை மூவரும் செய்தது விசாரணையில் தெரியவந்ததது.

இது மத வெறுப்பு, அடிப்படைவாதத்தால் இயக்கப்படும் கொடூரமான செயல் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset