நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

17,000 கோடி வங்கிக் கடன் மோசடி: அனில் அம்பானியிடம் 10 மணி நேரம் விசாரணை

புது டெல்லி:  

ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ரூ.17,000 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக, அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய 25 பேரின் 35 இடங்களில் அமலாக்கத்துறை பண முறைகேடு தொடர்பாக விசாரித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10:50 மணிக்கு ஆஜரான அனில் அம்பானி, இரவு 9 மணியளவில் வெளியே வந்தார்.

மீண்டும் விசாரணைக்கு அவர் அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset