
செய்திகள் மலேசியா
வணிகத் துறையில் இந்தியர்கள் ஈடுபாட்டை அதிகரிக்கும் அதேவேளையில் கணினி ஆளுமையை பெருக்கிக் கொண்டால் இன்னும் ஏற்றம் காணலாம்: வ.சிவகுமார் அறிவுரை
ஈப்போ:
வணிகம் என்றால் அதில் ஈடுபடுபவர்கள் நேரம் காலம் பாராமல் செயல்பட தொடங்கி விடுவார்கள் என்று பொருள்படும். குறிப்பாக, ஒருவர் சுமார் 3 வருடங்களாக ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டார் என்றால், அவர் முதல் கட்டத்தில் தேறி விட்டார் என்று குறிப்பிடலாம். இதுவே அவருக்கு கிடைக்கப்பெற்ற முதல் அங்கீகாரம் என்று இங்குள்ள ஈப்போ ராயல் கிளப்பில் கலை ஆர்வலர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணிகர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.
இத்தகைய விருது வழங்கி வணிகர்களை சிறப்பிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இதன் வாயிலாக வணிகர்கள் தன்முனைப்புடன் செயல்படுவதுடன் இது ஒரு நல்ல வழிகாட்டுதலாக அமையும்.
இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த கலை ஆர்வலர் இயக்கத்தின் நிர்வாகத்திற்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
ஒரு காலத்தில் வியாபாரம் செய்பவர்களை கண்டால் மிகவும் கீழ்த்தரமாக இந்த சமுதாயம் பார்த்தது. மாதந்திர ஊதியம் அல்லது அரசாங்கத் துறையில் வேலை செய்பவர்களை மட்டுமே நம்பியது எனலாம்.
ஆனால், இன்று கால மாற்றத்தில் வணிகர்கள் முதல் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று இங்கு நடைபெறும் வணிக விருது நிகழ்வில் வணிக மேதைகள் அல்லது வணிக சாம்ராஜ்ஜியம் படைத்தவர்கள் அல்ல. சாதரணமாக தங்களுக்கு தெரிந்த வியாபாரத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்திவரும் அன்பர்கள்தான். இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.
இன்றைய வணிக களம் சமூகவலைதளங்களின் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் சிறப்பான நிலையை அடைய முடியும். ஆகவே, இன்றைய வணிகர்கள் தங்களை கணினித்துறையில் வளப்படுத்திக்கொண்டு முன்னேற முற்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கவர ஏதுவாக அமையும் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்நிகழ்வினை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த கலை ஆர்வலர்கள் இயக்கத்தின் நிர்வாகத்தின் கனியமுதன், கேசவனுக்கும் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக்கொண்டார்.
பல துறைகளில் வணிகத்தை மேற்கொண்டு வரும் சிறுதொழில் வியாபாரிகளுக்கு அவர் வாழ்த்தினை கூறிக்கொண்டார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 6:18 pm
பக்காத்தான் ஹராப்பான் பரிசான் நேசனல் கூட்டணி வலுவாகவும் சிறப்பாகவும் உள்ளது: சிவநேசன்
August 5, 2025, 2:58 pm
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறை தொடர்ந்து நலிந்து வருகிறது: காதிர் சுல்தான்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:53 am