நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

61,000 ரிங்கிட் வீட்டுக் கடன் 39 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லையா?; கண்ணம்மாவின் வீடு ஏலத்திற்கு போனது சரியா?: டத்தோ கலைவாணர் கேள்வி

கோலாலம்பூர்:

61,000 ரிங்கிட் வீட்டுக் கடன் 39 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லை.

இதனால்  கண்ணம்மாவின் வீடு ஏலத்திற்கு போனது சரியா? என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 1986ஆம் ஆண்டு கண்ணம்மாவும் அவரின் கணவரும் சேர்ந்து அம்பாங்கில் ஒரு வீடு வாங்கினர்.

75 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான இவ்வீட்டுக்கு பிரபல வங்கியில் 61,000 ரிங்கிட் கடன் வாங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் 800 ரிங்கிட் தொடங்கி தற்போது 500 ரிங்கிட் வரை அவர் செலுத்தியுள்ளார்.

கண்ணம்மாவின் கணவர் இறந்து விட்டதால் அவரின் ஈபிஎப்  பணம், காப்புறுதி பணமும் வீட்டுக் கடனுக்காக எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு 70 வயதாகிறது. ஆனால் வீட்டுக்கான கடன் மட்டும் இன்னும் முடிவடையவில்லை.

குறிப்பாக தற்போது கண்ணம்மாவின் வீடு நாளை ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்தான் கண்ணம்மாவிற்கு நீதி கேட்டு பங்சாரில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமையகத்திற்கு நாங்கள வந்தோம்.

கண்ணம்மா இதுவரை செலுத்திய வங்கி கடனின் மொத்த கணக்கறிக்கை எங்களுக்கு வேண்டும்.

கடன் ஏன் பூர்த்தியாகவில்லை என்பதற்கான விளக்கமும் எங்களுக்கு தேவை.

குறிப்பாக கண்ணம்மா அலைகழிக்கப்பட்டது. மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டது உட்பட அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட பேங்க் பதிலளிக்க வேண்டும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset