
செய்திகள் இந்தியா
உண்மையான இந்தியரா?: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
புது டெல்லி:
கல்வான் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையின் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை "உண்மையான இந்தியர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்கமாட்டார்' என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த கருத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ராகுல் மீது மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்த ராகுலின் மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர் தத்தா, அகஸ்டீன் ஜார்ஜ் மாசி ஆகியோர், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் ஏன் இதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை;
2,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு நம்பகமான ஆதாரம் உள்ளதா? உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோன்ற கருத்தை கூறியிருக்க மாட்டீர்கள்' என்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் தரப்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இக் கருத்தை ராகுல் தெரிவித்தார்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட விஷயத்தை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் கவலை. ராகுலை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு தொரப்பட்டுள்ளது' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
August 27, 2025, 5:48 pm
மும்பையில் கோலாகலமாக தொடங்கிய விநாயகர் விழா; பாதுகாப்பு பணியில் 17000 போலீஸார்
August 27, 2025, 4:11 pm
இந்தியா பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி அமலாகியது
August 27, 2025, 3:39 pm
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
August 27, 2025, 1:52 pm