செய்திகள் இந்தியா
இந்தியாவுக்கு 25% மேல் கூடுதல் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல்: ரஷியா கண்டனம்
புது டெல்லி:
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு 25 சதவீதத்தை விட கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அணுஆயுத தொழிற்சாலைக்காக யுரேனியம் ஹெக்ஸுஃபுளோரைட், மின்வாகன உற்பத்திக்காக பல்லேடியம் ஆகியவற்றை ரஷியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது என்று முதல் முறையாக அமெரிக்காவுக்கு எதிராக பதிலளித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், எரிசக்தி, ரசாயனம், உரங்கள், இரும்பு, எஃகு, இயந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள் என பல்வேறு துறைகளில் ரஷியாவுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன.
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு பாரம்பரிய சந்தைகளிலிருந்து கச்சா எண்ணெய் முழுவதும் ஐரோப்பாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதன் காரணமாகவே ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்தது.
இந்தியர்களுக்கு குறைவான விலையில் தரமான எரிசக்தியை வழங்குவதை உறுதிசெய்ய ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நாடுகளைப் போல் தேச நலன், பொருளாதார பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளையும் இந்தியா மேற்கொள்ளும்' எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள ரஷிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா, டிரம்ப் விடுப்பது அரசியல் ரீதியிலான பொருளாதார நெருக்கடி என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
