நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.யில் வீட்டையே கங்கை நீரில் மூழ்கடித்து புனித நீராடி வரவேற்ற போலீஸ் அதிகாரி

புது டெல்லி:

உத்தர பிரதேச மாநிலத்தில்  வீட்டையே மூழ்கடித்த கங்கை நீரை போலீஸ் அதிகாரி பாலை ஊற்றி புனித நீராடி வரவேற்ற விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

கனமழை வெள்ளத்தால் பிரயாக்ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சந்திரதீப் நிஷாத் சமூக வலைதளத்தில் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் பணிக்கு புறப்பட்டபோது, தாய் கங்கா என் வீட்டுக்கு வந்திருந்தார். என் வீட்டு வாசலிலேயே அவரை வணங்கி ஆசி பெற்றேன் என்று பதிவிட்டார்.

மற்றொரு வீடியோவில் சீருடையில் இருக்கும் நிஷாத்,  கங்கை வெள்ளத்தில் ரோஜா இதழ்களை தூவியும், பால் ஊற்றியும், மேலாடை இல்லாமல் இடுப்பளவு தண்ணீர் இறங்கி கங்கையை வணங்கியபடி புனித நீராடினார். இந்த வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset