
செய்திகள் இந்தியா
தமிழக எம்.பி.யின் தங்கச் சங்கிலி டெல்லியில் பறிப்பு
புது டெல்லி:
டில்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுதாவிடம் 4 சவரன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து தப்பி சென்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சுதா எம் பி டெல்லி சென்றுள்ளார்.
காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை ஹெல்மெட் அணிந்தபடி வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து கொண்டு தப்பியோடினர்.
இது குறித்து போலீசாரிடம் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எனது தங்க சங்கிலியை இழுத்தபோது என் கழுத்தில் காயம் ஏற்பட்டது. எனது சுடிதாரும் தாக்குதலின்போது கிழிந்தது.
சாணக்யபுரி போன்ற உயர் பாதுகாப்பு மண்டலத்தில், மக்களவை உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த அப்பட்டமான தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவின் தேசிய தலைநகரில் உள்ள இந்த உயர் பாதுகாப்பு மண்டலத்தில்கூட ஒரு பெண் பாதுகாப்பாக நடக்க முடியாவிட்டால், வேறு எங்கு நாம் பாதுகாப்பாக உணர முடியும்?
என் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்" என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
August 27, 2025, 5:48 pm
மும்பையில் கோலாகலமாக தொடங்கிய விநாயகர் விழா; பாதுகாப்பு பணியில் 17000 போலீஸார்
August 27, 2025, 4:11 pm
இந்தியா பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி அமலாகியது
August 27, 2025, 3:39 pm
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
August 27, 2025, 1:52 pm