நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்: இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை  

ஹைதராபாத்:

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து கவனத்தைத் திருப்பியுள்ளது.

இந்த நிகழ்வையொட்டி ஆரோக்கிய வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இதய நல மருத்துவா்கள், அதிக மன அழுத்தம் உள்ள துறைகளில் பணிபுரியும் இளைஞா்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறும், வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றனா்.

ஹைதராபாதில் உள்ள காமினேனி மருத்துவமனையின் மூத்த இதய நல மருத்துவா் சாகா் புயாா், முன்பு 60 வயதில் காணப்பட்ட இதய நோய்கள், இப்போது 30 வயது இளைஞா்களுக்கும் வரத் தொடங்கியுள்ளதாக கவலை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ரத்த நாளங்கள் மெதுவாக சுருங்குவது 60 வயதிலிருந்து, இப்போது 30-40 வயதினரிடம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் ஆகியவைதான். இன்றைய பள்ளி மாணவா்களும் அதிக போட்டி நிறைந்த சூழல் மற்றும் செயல்திறன் அழுத்தத்தால் மன அழுத்தத்தை அனுபவித்து வருகின்றனா்’ என்றாா்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset