நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன தேநீர் பைகளில் 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலிசார் பறிமுதல் செய்தனர்: ஹுசைன் ஒமார் கான்

கோலாலம்பூர்:

சீன தேநீர் பைகளில் 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலிசார் பறிமுதல் செய்தனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை தெரிவித்தார்.


கிட்டத்தட்ட 17.78 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கிட்டத்தட்ட 440 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்த பின்னர்,  போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலிசார் முறியடித்துள்ளனர்.

போதைப் பொருள் வழக்கில் இது இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய பறிமுதல் இதுவாகும்.

கடந்த ஜூலை 29 அன்று இங்குள்ள தாமான் ஸ்ரீ ஹர்டமாஸில் உள்ள ஒரு  வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 234 கிலோ எடையுள்ள 225 மெத்தம்பேட்டமைன் பொட்டலங்கள்,  205.7 கிலோ எடையுள்ள 200 கெட்டமைன் பொட்டலங்கள் போலிசாரால் கைப்பற்றப்பட்டது.

அண்டை நாட்டிலிருந்து நிலவழியாக கடத்தப்பட்டதாக நம்பப்படும் போதைப்பொருட்கள், சீன தேநீர் போன்ற பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட ஒருவர் போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாக நம்பப்படுவதாகவும், வீட்டை போதைப்பொருட்களை சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset