நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய கூட்டுறவு சட்ட மசோதா டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்: இவோன் பெனடிக் 

கோலாலம்பூர்:

புதிய கூட்டுறவு சட்ட மசோதா தற்போது இறுதி வரைவு கட்டத்தில் உள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் இவோன் பெனடிக் இதனை கூறினார்.

இன்று வரை அமைச்சும் மலேசிய கூட்டுறவு ஆணையமும் 23 ஈடுபாட்டு அமர்வுகளை நடத்தியுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சபா, சரவா, பினாங்கு, ஜொகூர், பகாங் அரசாங்க நிர்வாகங்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்றனர்.

கூட்டுறவு சட்ட மசோதாவின் முதல் வாசிப்பு டிசம்பர் 2025 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புகள் மார்ச் 2026 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய சட்டம் ஜூன் 2026 இல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு டிசம்பர் 2026 க்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய கூட்டுறவு ஆலோசனைக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது அவர் இவ்வாறு  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset