நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

61% மக்களின் சேமிப்பில் 1,000 ரிங்கிட் இல்லையென்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு எந்த அர்த்தமும் இல்லை: ஹம்சா

கோலாலம்பூர்:

நாட்டில்  61% மக்களின் சேமிப்பில் 1,000 ரிங்கிட் இல்லையென்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு எந்த அர்த்தமும் இல்லை.

எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

நாட்டில் 61% மக்களிடம் இன்னும் அவசரகாலத்திற்காக குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் கூட  சேமிப்பு இல்லை என்று பேங்க் நெகாரா தரவு காட்டுகிறது.

இதனால் 5.5% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியால் எந்த அர்த்தமும் இல்லை.

13ஆவது மலேசியா திட்டம் அரசியல் இலட்சியவாதத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது.

மேலும் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான யதார்த்தத்தால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சமையலறை பொருட்களின் விலை கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் அதிகரித்தால் பணவீக்கம் 1.1% என அறிவிக்கப்படுவதன் அர்த்தம் என்ன.

குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் 2.9% இலிருந்து 3.3% ஆக உயர்ந்துள்ள உணவுப் பணவீக்கம் குறித்து நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அவர் மக்களவையில் 13ஆவது மலேசியத் திட்ட விவாதத்தின் போது அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset