நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பேருந்துச் சேவைகளை அதிகாலை 4 மணிக்குத் தொடங்க ஆலோசனை

ஜோகூர்பாரு:

ஜோகூர் பாருவுக்கும்
சிங்கப்பூருக்கும்
இடையிலான பேருந்துச் சேவைகளை அதிகாலை 4 மணிக்குத் தொடங்குவது பற்றிப் பரிசீலிக்கப்படுகிறது.

மலேசிய அதிகாரிகள் அந்த வேண்டுகோளை சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் முன்வைத்துள்ளனர்.

இப்போது சிங்கப்பூர், ஜோகூர்  பேருந்துச் சேவை அதிகாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.

ஒரு மணி நேரம் முன்னதாக அதைத் தொடங்கும்படி மலேசியத் தரப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் பேருந்துச் சேவை நிறுவனங்களுடன் அது குறித்துப் பேசி வருகிறது.

சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாருவுக்கும் இடையே தற்போது Causeway Link, SBS Transit, SMRT உள்ளிட்ட எட்டுப் பேருந்துச் சேவைகள் இயங்கி வருகின்றன.

Xingyun Travel எனும் தனியார் பேருந்துச் சேவை நிறுவனம் காலை 5 மணிக்குச் சேவையைத் தொடங்குகிறது. அதற்கு முன்னதாகத் தொடங்கத் திட்டம் இல்லை என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறினார்.

சேவை தொடங்கும் நேரத்தை மாற்றுவது பற்றி நிலப் போக்குவரத்து ஆணையத்துடனும் தொழிற்சங்கத்துடனும் கலந்துரையாடுவதாக SMRT நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கூறினார்.

சேவை நேர மாற்றங்களால் பேருந்து ஓட்டுநரின் நலனும் பயணிகளின் பாதுகாப்பும் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset