நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஒருவழியாக வெளியானது ‘மாநாடு’- சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

சென்னை:

மாநாடு படம் கடைசி நேர இழுபறிக்குப் பின் காலை 7 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. பிறகு மாநாடு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

சிம்பு படங்களுக்கு ரசிகர்கள் கட்அவுட் வைத்து தோரணம் கட்டுவது இயற்கை. ஆனால், இந்தமுறை வழக்கத்தைவிட கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன.

பல திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். 5 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

Maanaadu poster: STR set to fight a lonely battle | Entertainment News,The  Indian Express

ஆனால், கடைசிநேரப் பிரச்சனையில் படம் வெளியாகவில்லை. இதனால், அதிகாலையிலேயே வந்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும், தாய் உஷா ராஜேந்தரும் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உதவினர். நடிகர் மகத் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டு இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

காலை 7 மணிக்கு பிரச்சனை சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துத் திரையரங்குகளிலும் மாநாடு திரையிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset