
செய்திகள் மலேசியா
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 31ஆவது மகா கல்வி யாத்திரை: இந்திய சமுதாயத்தின் புரட்சிக்கர மாற்றம்
பத்துமலை:
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 31ஆவது மகா கல்வி யாத்திரை என்பது இந்திய சமுதாயத்தின் புரட்சிக்கர மாற்றமாகும்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.
கட்டொழுக்கம், சமய நம்பிக்கை கூடிய கல்வியே ஒரு மனிதனுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
அவ்வெற்றியின் மூலம் இந்திய சமூகம் முன்னேற்றம் அடையும் என்ற ஆழமான நம்பிக்கையோடு ஸ்ரீ முருகன் நிலையம் கடந்த 43 ஆண்டுகளாக கல்விப் புரட்சி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.
அவ்வகையில், ஸ்ரீ முருகன் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 31ஆவது ஆண்டுக் கல்விக் யாத்திரையில் கலந்துகொள்ளும் நோக்கில் இன்று காலை பத்துமலை திருத்தலத்தில் ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்று திரண்டனர்.
இந்த ஆண்டு கல்விக் யாத்திரை ஸ்ரீ முருகன் நிலையத்தின் தோற்றுநர் தான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் யாத்திரையாகும்.
அவரது இழப்பு ஆழ்ந்து உணரப்பட்டாலும், எந்த ஒரு குழந்தையும் தனித்து நடக்காது என்பதை உறுதிசெய்ய அவர் முன்னெடுத்து நீடித்த பணி தொடர்ந்து வாழ்கிறது.
இவ்வாண்டின் கல்வியாத்திரைக்குக் கெடா மாநிலம் தொடங்கி, ஜொகூர் மாநிலம் வரையிலும் உள்ள அனைத்து ஸ்ரீ முருகன் நிலையம் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் மிக பிரமாண்டமாக தொடங்கியது.
நம் இந்திய மாணவர்களின் கல்வி இலக்குகளை மீண்டும் உறுதிப்படுத்தவும், அவர்களின் கல்வி கொள்கையை பிராத்தனையாகச் செலுத்தவும் ஒவ்வொரு இந்திய குடும்பங்களும் பத்துமலை முருகன் திருதலத்தில் ஒன்று கூடும் தருணம் இது.
7 நாட்கள் கல்வி விரதம் இருந்து கல்வி யாத்திரையன்று முருக பெருமானை வேண்டி புனித நீரை தன் கல்விக்காகவும், குடும்பத்திற்காக, சமூதாயத்திற்காகக் கொண்டு செல்வதே இந்த யாத்திரையின் முதல் நோக்கமாகும்.
இந்த கல்வி யாத்திரை உள்ளார்ந்த ஒழுக்கத்தை வளர்ப்பதோடு, மாணவர்கள் தங்கள் பலத்தையும் ஆற்றலையும் உணர்ந்து கொள்ளவும் வழிவகுக்கிறது.
காலை 7.00 மணி முதல் புத்துணர்ச்சியளிக்கு தெய்வீகப் பாடல்களுடன் இக்கல்வி யாத்திரைத் தொடங்கியது.
எல்லா சூழ்நிலைக்கும் முருக பெருமான வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையில் திரண்ட மாணவர்களையும் பெற்றோர்களையும் நமது தன்னார்வாலர்கள் அர்ச்சனை செய்யப்பட்ட தீர்த்த நீரை அளித்து அன்போடு வரவேற்றார்கள்.
ஸ்ரீ முருகன் நிலையக் கோட்பாட்டிற்கு ஏற்ப சரியாக காலை 8.01 மணிக்கு காயத்திர மந்திரத்துடன் சிறப்பான முறையில் யாகம் வளர்த்து யாத்திரை தொடங்கலானது.
யாகத்திற்கு பின்னர், அனைவரும் ஸ்ரீ முருக நிலையத்தின் சக்தி வேலைப் பின் தொடர்ந்து மலைமேல் முருகனுக்காக நேர்த்திக்கடனை முடித்தனர்.
பின்னர், முழு நம்பிக்கை கடலில் மூழ்கியிருக்கும் தருணத்தில் மாணவர்களுக்கு எழுசியூட்டும் வகையில் ஸ்ரீ முருகம் நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா உரை அமைந்தது.
தம்பிராஜா தந்திரம் என்ற நோக்கில் ஸ்ரீ முருகன் நிலையம் அனைத்து இந்திய குடும்பங்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக, மாற்றத்தை ஏற்படுத்து வழியாகவும் கல்வி, ஆன்மீகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வி கொள்கையை முன்னிருத்தும் என்று ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.
ஒவ்வொரு இந்திய குடும்பங்களும் இந்த 31ஆவது கல்வி யாத்திரையில் ஒன்று கூடும்போது, அது மாணவர்களுக்கு வலுவான உந்துதலை உருவாக்கி குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2025, 2:04 pm
அனைத்து இனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மடானி அரசு உறுதியாக உள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2025, 1:20 pm
ஷாரா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்: பிரதமர்
August 3, 2025, 11:15 am
மூன்றுநாள் தொழில்துறை கல்வி முகாம்: 30ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் சிவநேசன்
August 3, 2025, 10:14 am
டத்தோஸ்ரீ சரவணனின் கூற்று குறித்து கவலைப்படத் தேவையில்லை; அது அவரது தனிப்பட்ட கருத்து: ஜொஹாரி
August 3, 2025, 10:10 am