நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூபிஎம்மில் பேருந்து மரத்தில் மோதியது: ஒரு ஆசிரியர், 3 மாணவர்கள் காயம்

சிப்பாங்:

யூபிஎம்மில் பேருந்து மரத்தில் மோதிய சம்பவத்தில் ஒரு ஆசிரியர், 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் யூபிஎம் ஜாலான் பெர்சியாரன் பல்கலைக்கழகம் 1இல் நிகழ்ந்தது.

மதியம் 12.18 மணியளவில் 44 வயது நபர் ஓட்டிச் சென்ற பேருந்து, ஐந்து ஆசிரியர்கள், 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு சாக்லேட் தொழிற்சாலையிலிருந்து ஜி2ஜி விலங்கு பூங்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் அம்பாங் துனாஸ் இஸ்லாம் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் மூன்று மாணவர்களும் காயமடைந்தனர்.

பேருந்து நேரான பாதையில் சென்று கொண்டிருந்ததாகவும், பின்னர் திடீரென சாலையின் இடதுபுறம் சறுக்கி மரத்தில் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

செர்டாங் மாவட்ட போலிஸ் தலைவர், உதவி ஆணையர் முகமது ஃபரித் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset