செய்திகள் இந்தியா
அயர்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முன்னெச்சரிக்கை
லண்டன்:
அயர்லாந்தில் உள்ள இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல் அதிகரித்துவருவதால், அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அயர்லாந்து தலைநகர் டப்லின், பிற பகுதிகளில் அண்மைக் காலமாக இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
டப்லின் புறநகர் பகுதியில் கடந்த ஜூலை 19ஆம்தேதி 40 வயது இந்தியர், உள்ளூர் நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதைக் கண்டித்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனவெறி தாக்குதல் சம்பவங்கள் அங்கு தொடர்கின்றன.
அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
அதேநேரம், இந்தியர்கள் தங்களின் பாதுகாப்புக்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரத்திலும் அதிகாலை நேரங்களிலும் ஆள் அரவமற்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
அவசர உதவிக்கு 0899423734 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று டப்லினில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
