நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆதார் எதற்கு மட்டும் செல்லும்: இந்திய அரசு விளக்கம்

புது டெல்லி: 

ஆதார் அட்டை குடியுரிமை ஆவணம் அல்ல என்றும் அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான அடையாள ஆவணம் மட்டுமே என்றும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு  விளக்கமளித்தது.

ஆதாரை ஆவணமாக பயன்படுத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சாகரிகா கோஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  ஒன்றிய இணையமைச்சர் ஜிதின் பிரசாத், ஆதார் என்பது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட இந்தியாவில் குறைந்தபட்சம் 182 நாள்களுக்கு மேல் அல்லது 12 மாதங்களுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் இந்திய தனி அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் 12 இலக்க அடையாள எண் ஆகும்.

அரசின் சேவைகள், நலத் திட்டங்களைப் பெறுவதற்கு மட்டுமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதாரை குடியுரிமை ஆவணமாகவோ அல்லது இருப்பிடச் சான்றாகவோ பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset