நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகாராஷ்டிர பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு

மும்பை:

மகாராஷ்டிரா சட்டபேரவைக்குள் ஆன்லைன் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் மாணிக்ராவ் கோகட்டேவுக்கு விளையாட்டு, இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தேசியவாத காங்கிரஸை (அஜீத் பவார்) சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, ரம்மி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தன.

இந்நிலையில், அவரிடம் இருந்த வேளாண்துறை பறிக்கப்பட்டு விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக விளையாட்டுத் துறையை கையாண்ட தத்தத்ராயா பார்னேவுக்கு வேளாண் துறையை இலாகா மாற்றப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset